நெட்டிசைன்களின் கேலி; பிரேமலதா பதிலடி!

Filed under: அரசியல்,தமிழகம் |

தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா அளித்த பேட்டியில் நாங்கதான் உண்மையான எதிர்க்கட்சி என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் தற்போது திமுக கட்சி ஆளும் கட்சியாக செயல்பட்டு வருகிறது. ஆனால் எதிர்க்கட்சி எது என்ற குழப்பம் மக்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகள் மத்தியிலும் நீடித்த வண்ணம் உள்ளது.

அதிமுக கட்சியில் சட்டமன்ற எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் அவர்கள்தான் உண்மையான எதிர்கட்சி என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மக்கள் தேவையின் அடிப்படையில் நாங்கள் தான் உண்மையான எதிர்க்கட்சி என்று கூறியுள்ளார். அதேபோல் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையும் நாங்கள்தான் எதிர்க்கட்சி என்று கூறினார். தற்போது தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா உண்மையில் நாங்கள் தான் எதிர்க்கட்சி என்று கூறியுள்ளார். தமிழகத்தின் உண்மையான எதிர்க்கட்சி எது என்பதை யாராவது கூறுங்கள் என நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.