தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.
தே.மு.தி.க., தலைவரான நடிகர் விஜயகாந்தின் மனைவியும், தேமுதிகவின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதை தொடர்ந்து அவரை சென்னை மனப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு முன்பே தே.மு.தி.க., தலைவரும் மற்றும் நடிகருமான விஜயகாந்துக்கு கடந்த 22ஆம் தேதி கொரோனா உறுதியான நிலையில் அவரை சென்னை மனப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் இன்று வீடு திரும்புவார் எனவும் விஜயகாந்தின் மைத்துனரும் மற்றும் தேமுதிகவின் செயலாளருமான சுதீஷ் தெரிவித்துள்ளார்.