பகீர் தகவலளிக்கும் சுப்பிரமணியன் சுவாமி

Filed under: அரசியல்,இந்தியா |

சுப்பிரமணியன் சாமி பிரதமர் மோடி சமீபத்தில் தேஜஸ் விமானத்தில் பறந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது போலி என தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் மோடி சமீபத்தில் பெங்களூரை தளமாகக் கொண்ட ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு வருகை தந்த ஆய்வு செய்தார். அதன்பின் மணிக்கு 1975 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட தேஜஸ் போர் விமானத்தில் அவர் பயணம் மேற்கொண்டார். இவ்விமானத்தில் வாஜ்பாயை அடுத்து மோடி தான் பயணம் செய்தார். இந்நிலையில் இது குறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது சமூக வலைத்தளத்தில், “ஏர்போர்ஸ் ஜெட் விமானத்தில் பறக்கும் மோடியின் படம் போலியானது என்று ஒரு விமானப்படை அதிகாரி என்னிடம் கூறினார்” 25 ஆயிரம் அடி உயரத்தில் கண்ணாடி மூடாமல் ஏர்போர்ஸ் ஜெட் விமானம் பறக்க முடியாது, பிரதமர் மோடியின் அந்த படம் போலியானது, இதற்கு பிரதமர் அலுவலகம் என்ன விளக்கமளிக்க போகிறது.