படிப்படியாக குறையும் கொரோனா!

Filed under: இந்தியா |

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் 11,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது படிப்படியாக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மத்திய சுகாதாரத் துறையின் அறிவிப்பின்படி நாடு முழுவதும் 7633 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மொத்தம் 61233 என உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 6702 என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தீவிர நடவடிக்கை எடுத்ததால்தான் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக கூறப்படுகிறது.