செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதற்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஐந்து மாதத்துக்கு மேல் மூடப்பட்டிருந்த பள்ளிகள் வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பின்பு இதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் பள்ளிகளை திறப்பதற்கும், ஆசிரியர், மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பள்ளிகளில் திறப்பதற்கு முன்பு அனைத்து இடங்களிலும் முழுமையாக சுத்தப்படுத்த வேண்டும் என்றும் தெர்மல் ஸ்கேனர் மூலம் அனைவரையும் சோதனை செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரார்த்தனைக் கூட்டம், விளையாட்டு மைதானம், உள்பட பல இடங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளத்தில் குளிப்பதற்கும் தடை. பள்ளி வரும் முன்பு சனிடைசர், உடல் வெப்பநிலையை ஆகிவற்றை பரிசோதனை செய்வது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கு அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றும் மாணவர்கள் வாகனங்களை முறையாக சுத்தம் செய்ய வேண்டும் எனவும் மாணவர்கள், ஆசிரியர்கள் வகுப்பறையில் முக கவசம் அணிய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாணவர்கள் தங்களுக்குள்ளாகவே பேனா, பென்சில், போன்றவற்றை மாற்றி கொள்வதற்கு அனுமதிக்க கூடாது எனவும் மாணவர்களிடையே 6 மீட்டர் இடைவெளியில் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் சோப்பு, சானிடைசேர் கொண்டு அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்துவதை முடிந்த வரை தொடரலாம் எனவும் பெற்றோர் அல்லது காப்பாளர்கள் இடம் எழுத்துபூர்வமாக ஒப்புதல் பெற்று 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது