பதானை புறக்கணிக்க டிரெண்டிங் செய்யும் நெட்டிசன்கள்!

Filed under: சினிமா |

விரைவில் வெளியாக உள்ள ஷாரூக்கானின் ‘பதான்’ திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டிரெண்டிங் ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.

ஷாரூக்கான் நடிப்பில், இந்தி இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள திரைப்படம் ‘பதான்’. இப்படத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர். படம் ஜனவரி 2023ல் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. கடந்த சில காலமாக பாலிவுட்டில் வெளியாகும் பல படங்களை பாலிவுட் ரசிகர்களே பல்வேறு காரணங்களுக்காக புறக்கணித்து ஹேஷ்டேகை டிரெண்ட் செய்து வருகின்றனர். தற்போது அந்த லிஸ்ட்டில் “பதான்” திரைப்படமும் இணைந்துள்ளது. மேலும் இதற்கு முன்னர் இதுபோல் டுவிட்டரில் ஙிஷீஹ்நீஷீtt ஹேஷ்டேகில் சிக்கிய பாலிவுட் படங்களும் சுமார் வெற்றியையோ அல்லது தோல்வியையொ பெற்றிருப்பதால் இந்த டிரெண்டிங்கால் “பதான்” வெற்றியை பாதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.