பத்மனுக்கு ஜாமின் இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்!

Filed under: சென்னை |

கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டார்.

ஹரிபத்மன் சார்பில் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமின் மனு தாக்கல் செய்தார். இந்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ஹரிபத்மனுக்கு இடைக்கால ஜாமின் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த மனு மீதான விசாரணை ஜூன் 16ம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரிபத்மன் ஜாமீன் கிடைக்க ஜூன் 16ம் தேதி வரை காத்திருக்க வேண்டும் என்பது உறுதியாகி உள்ளது.