பயோபிக் இரண்டாம் பாகத்தில் விஷால்?

Filed under: சினிமா |

நடிகர் ஜீவாவிடம் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் பயோபிக் திரைப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஆந்திரா சட்டசபை தேர்தலுக்குள் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தையும் முன்னாள் முதலமைச்சருமான ராஜசேகர ரெட்டியின் பயோபிக், ‘யாத்ரா’ என்ற பெயரில் எடுக்கப்பட்டு அதில் மம்மூட்டி நடித்தார். இப்போது “யாத்ரா” படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் பாகத்தில் மம்மூட்டி நடித்து, அந்த படம் பிளாப்பான நிலையில் இப்போது இரண்டாம் பாகத்தில் விஷாலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.