பரபரப்பாக இயங்கி வரும் லோகேஷ்!

Filed under: சினிமா |

நடிகர் விஜய் 67 படத்திற்கான விறுவிறுப்பான வேலைகளில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

“விக்ரம்“ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியானது. படத்தில் கதாநாயகி என்று யாருமில்லை என்றும் அதுபோலவே படத்தில் பாடல்களும் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் இப்போது ஒரு முக்கிய வேடத்தில் சமந்தா நடிக்கப் போவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த படத்துக்கான செட் ஒன்று இப்போது சென்னையை அடுத்த பையனூரில் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. செட் பணிகள் நடப்பதால் விரைவில் ஷூட்டிங் தொடங்கிவிடும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.