பாகிஸ்தான் டிரோன் இந்திய எல்லையிலா?

Filed under: இந்தியா,உலகம் |

எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் டிரோனைசுட்டு வீழ்த்தியுள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்திய பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் நாட்டின் டிரோன் ஒன்று வருவதை எல்லை பாதுகாப்பு படையினர் பார்த்தனர். இதையடுத்து அந்த டிரோனை எல்லை பாதுகாப்பு வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோனில் 3 கிலோ ஹெராயின் மற்றும் சீனாவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் தோட்டாக்கள் ஆகியவை இருந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.