பிக்பாஸ் நிகழ்ச்சியில் சமந்தா?

Filed under: சினிமா |

சமீபத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகிய மூவரும் சேர்ந்து நடித்த “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இப்படத்தை சமந்தாவிற்காக பார்த்தவர்கள் தான் ஏராளம்.


இதைதொடர்ந்து அடுத்து குஷி, யசோதா மற்றும் சகுந்தலம் ஆகிய திரைப்படங்கள் வரிசையாக ரிலீசுக்காக காத்திருக்கின்றன. இப்போது அவர் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முன்னதாக நாகார்ஜுனாவுக்கு பதிலாக சில எபிசோட்களில் சமந்தா பங்குபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.