பிரதமர் மோடியின் டுவிட்டர் பதிவு!

Filed under: அரசியல்,இந்தியா,உலகம் |

பிரதமர் மோடி போப் பிரான்சிஸ் குணமடைய பிரார்த்திப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக வாடிகானில் வாழ்ந்து வரும் போப் பிரான்சிஸ் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குச் சுவாசிப்பதில் சிரமம் இருப்பதால், சுவாச தொற்றுநோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது உடல் நிலை சீராகி வருகிறது. இன்னும் சில நாட்கள் மருத்துவரின் அறிவுரையின்படி அவர் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்று வாடிகன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அடுத்தவாரம் நடைபெறும் புனித வெள்ளி வார நிகழ்வுகளில் கலந்துகொள்வது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. போப் பிரான்சிஸ் குணமடைய வேண்டுமென்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “போப் பிரான்சிஸ் விரைவில் உடல் நலம்பெற வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். உக்ரைன் மீதான போர் தொடர்பாக விரைவில் ரஷிய அதிபர் புதினை சந்திக்கவுள்ளதாகவும், பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, அவர் இந்தியா வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.