பிரதமர் மோடி இளையராஜாவுக்கு நன்றி!

Filed under: இந்தியா |

இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜா. இவர் 1500க்கும் மேற்பட்ட சினிமா படங்களுக்கு இசையமைத்து பல விருதுகளை பெற்றுள்ளார்.

 

பிரதமர் மோடி அண்ணல் அம்பேத்கருக்கு நிகரானர் என இசைஞானி இளையராஜா புகழ்ந்து ஒரு நூலிற்கு அணிந்துரை எழுதிய நிலையில், மோடி, இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

“மோடியும் அம்பேத்கரும்“ என்ற புத்தகம் சமீபத்தில் வெளியானது. இப்புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய இளையராஜா, “இந்தியா தற்போது, கல்வித்துறை, தொழில்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டுள்ளது. குழந்தைகளைக் காப்போம், குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் மற்றும் முத்தலாக் முறைக்கு எதிரான சட்டம் பெண்களின் வாழ்வில் ஏற்பட்டுத்தியுள்ள இதனை அம்பேத்கர் பார்த்திருந்தால் அவர் பெருமைப்பட்டிருப்பார்.

Ilaiyaraaja at Merku Thodarchi Malai Press Meet

இருவரும் இந்தியா பற்றி பெரியதாக கனவு கண்டவர்கள், செயலின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் என தெரிவித்தார். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து, இளையராஜா, தன் படத்திற்கு இசையமைத்த பாடல்களை எப்படி திரும்ப பெற முடியாதோ அதெபோல் தான் கூறிய கருத்தையும் திரும்ப பெற முடியாது என தெரிவித்து, தான் யாரையும் விமர்சிக்கவில்லை என்ற தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இசை ஞானி இளையராஜாவை தொலைபேசியின் மூலம் தொடர்புகொண்ட பிரதமர் மோடி, தன்னைப் பற்றிய நூலிற்கு அணிந்துரை எழுதியதற்கு நன்றி எனக் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.