பிரபல நடிகருக்கு வில்லனாக மாறும் ஜெய்!!!

Filed under: Uncategory,சினிமா |

பிரபல நடிகருக்கு வில்லனாக மாறும் ஜெய்!!!

ஒரு சைடில் இருந்து பார்த்தால் தளபதி விஜய் போலவே இருக்கும் ஜெய், பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன்பிறகு 2007 ஆம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை-28 படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
முதல்படமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த நிலையில் அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் ஜெய்யை தேடி வந்தனர். ஆனால் அதை எல்லாம் சரியாக பயன்படுத்திக் கொண்டாரா என்றால் கேள்விக்குறிதான். பத்தாததற்க்கு குடியும் கூத்துமாக தன்னுடைய கேரியரை கெடுத்துக் கொண்டார்.
கூடா நட்பு கேடாய் முடியும் கதைதான். இந்நிலையில் சமீபகாலமாக இரண்டாவது ஹீரோ, வெப்சீரிஸ் வாய்ப்புகள் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.
சுசீந்திரன் தவிர வேறு யாரும் ஜெய்க்கு ஹீரோ வாய்ப்பு தருவதாக இல்லையாம்.
சரி, ஹீரோ வேஷத்தை நம்பினால் வேலைக்கு ஆகாது என தற்போது சுந்தர் சி படம் ஒன்றில் அவருக்கு வில்லனாக நடிக்க ஒத்துக் கொண்டாராம். வெளியில் கேட்டால் ஹீரோவை விட வில்லன் வேடம்தான் பவர்ஃபுல்லான வேடம் என மார்தட்டி கொள்கிறாராம்.

ஒரு காலத்தில் இளம் ரசிகைகளின் கணவனாக இருந்த ஜெய், மார்க்கெட் குறைவதற்கு தல அஜித் போல ஆக வேண்டும் என நினைத்து பல சேட்டைகள் செய்ததால்தான் அவரது நிலைமை இப்படி ஆகி விட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.
என்னைக்குமே தல தல தான்! வேறு யாரும் அஜித் போலாக முடியாது. அஜித்தின் நேரம் தவறாமை, ஒரு படத்தில் கமிட் ஆகி விட்டால் உயிரே போனாலும் அந்த படத்தை விட்டு வேறு பக்கம் செல்ல மாட்டேன் என்கிற குணம், இதெல்லாம்தான் தல அஜித்தை உயரத்தில் வைத்துள்ளது.
முதல் கியரில் வண்டியை நகர்த்தாமல் நேராக டாப் கியரில் நகர்த்தினால் இப்படித்தான் கேரியர் காலியாகி விடும் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் ஜெய். ஜி, என்னமோ போங்க ஜி!