பி.வி.சிந்து அரையிறுதிக்கு தகுதி!

Filed under: விளையாட்டு |

இன்று இந்திய வீராங்கனை பிவி சிந்து சிங்கப்பூர் பேட்மிண்டன் போட்டியில் நடந்த காலிறுதி போட்டியில் சீனா வீராங்கனையை தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தொடர் வெற்றி பெற்று வருகிறார். சீனா வீராங்கனையுடன் இன்று பிவி சிந்து போதிய நிலையில் 17 – 21, 21 – 11 , 21 – 19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து அவர் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.