பீகார் மாநிலத்தில் அரசியல் பரபரப்பு!

Filed under: அரசியல்,இந்தியா |

பதவி விலகிய ஒரு மணி நேரத்தில் மீண்டும் முதல்வரானார் நிதிஸ்குமார். இதனால் பீகார் மாநிலத்தில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பீகார் அரசியலில் பாஜக -மற்றும் ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளிடையே நீண்ட காலமாக மோதல் இருந்தது. இந்நிலையில் இன்று முதலமைச்சர் நிதிஸ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பீகார் மாநிலத்தில், முதலமைச்சர் நிதிஸ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜன தா தளம், பாஜகவுடன் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. நிதிஸ்குமாருக்கும் பாஜகவுக்குமிடையே சமீபகாலமாக கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்துள்ளது. பாஜக சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளையும், பிரதமர் மோடி தலைமையிலான நிடி அயோக் நிகழ்ச்சியையும் அவர் புறக்கணித்தார். இதற்கு பாஜகவின் விமர்சித்தனர். பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இன்மேல், ஐக்கிய ஜனதா தளம் இடம்பெறாது என கூறி இன்று மாலை 4 மணிக்கு முதலமைச்சர் நிதிஸ்குமார் தன் ராஜினாமா கடிதத்தை அளித்தார். எனவே, தேசிய ஜன நாயகக் கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா எம்.பிக்கள் வெளியேறுவர் என அக்கட்சி எம்பிகள் கூறினர்.

பதவி விலகிய ஒரு மணி நேரத்திற்குள் பீகார் மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கூடினர். இடதுசாரிகள் உள்ளிட்ட 160 எம்எல்ஏக்கள் நிதிஸ்குமார் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க ஆதரவு தெரிவித்துள்னர். இதையடுத்து பீகாரில் பதவி விலகிய ஒரு மணி நேரத்திற்குள் மீண்டும் முதலமைச்சராக நிதிஸ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை அவர் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.