டெல்லி அரசு ஏற்கனவே பெண்களுக்கு பேருந்துகளில் டிக்கெட் இல்லை என்று அறிவித்திருந்தது. தற்போது கட்டுமான தொழிலாளர்களுக்கும் டிக்கெட் இல்லை என அறிவித்துள்ளது.
இந்தியாவிலேயே முதன் முதலில் பெண்களுக்கு பேருந்துகளில் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டது டெல்லியில் ஆட்சி நடத்திவரும் ஆம் ஆத்மி கட்சி தான். தற்போது மகளிர்களை அடுத்து டெல்லியில் உள்ள கட்டுமான தொழிலாளர்களும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தகவல் தெரிவித்துள்ளார்.
இதனால் 10 லட்சம் பேர் பயன் பெறுவார்கள் என்றும் அவர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பபல் கட்டுமானத் தொழிலாளர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.