அரசு பேருந்துகளில் இனி 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்துள்ளார்.
போக்குவரத்து துறை மானிய கோரிக்கை மீது அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தமிழக சட்டப்பேரவையில் இன்று பதிலுரை ஆற்றி வருகிறார். அவர் பேசியதாவது:-
போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்து மே 12ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும். மாணவர்கள் படிக்கட்டில் பயணிப்பதை தடுக்க அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் அமைக்கப்படும். அதோடு 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரசு பேருந்துகளில் இனி கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. தற்போது 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரைக் கட்டணத்தில் பயணசீட்டு வழங்கப்படுகிறது. முன்னதாக பெண்களுக்கு இலவச பயணம் வழங்கப்பட்டு வருகிறது.