பொதுமக்களுக்கு சுதந்திர தினவிழாவுக்கு அனுமதி!

Filed under: சென்னை |

பொதுமக்களுக்கு இம்மாதம் மெரினாவில் நடைபெற உள்ள 75வது சுதந்திர தினவிழாவை பார்வையிட அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

75ம் ஆண்டு சுதந்திர தின விழா வருகிற 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாட்டில் அனைவரும் இதைக் கொண்டாட தயாராகி வருகின்றனர். சமீபத்தில் பிரதமர் மோடி, நாட்டு மக்கள் அனைவரும் 75 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் சமூகவலைதளங்களில் உள்ள டிபியில் தேசிய கொடியை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
வீடுதோறும் தேசியக்கொடி என்ற திட்டத்தின் கீழ் இம்மாதம் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றும்படி மத்திய அரசு கூறியுள்ளது. இந்நிலையில், கொரொனா காலத்தில் ஊரடங்கு அமலில் இருந்ததால், கடந்த 2 ஆண்டுகளாக மெரினாவில் நடந்த சுதந்திர தின விழாவில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. வரும் ஆகஸ்ட் 15ம்தேதி மெரினாவில் நடக்கவுள்ள 75 சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொதுமக்கள் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.