சாத்தான்குளம் சம்பவம்: சத்தியமா விடக்கூடாது – நடிகர் ரஜினி கடும் கோபம்!

Filed under: சென்னை |

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளத்தில் தந்தை – மகன் மரணத்துக்கு காரணமானவர்களை சத்தியமா விடவே கூடாது என நடிகர் ரஜினி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஊரடங்கு சமயத்தில் அதிக நேரம் கடை தீர்க்கப்பட்டதால் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இதை பற்றி நடிகர் ரஜினி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்: அந்த பதிவில் அவர் கூறியது: தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக் கூடாது

சத்தியமா விடவே கூடாது என்றார்.