“பொன்னியின் செல்வன்” அப்டேட்!

Filed under: சினிமா |

இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது.

 

இயக்குநர் மணிரத்னத்தின் தனது கனவுப் படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் விறுவிறுப்பாக இருக்கிறார். இந்த திரைப்படம் இரு பாகங்களாக உருவாகிறது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா. பிரகாஷ்ராஜ். ஜெயராம். சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தின் முதல்பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் இப்போது செப்டம்பர் 30ம் தேதி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் டீசர் வரும் ஜூன் மாதம் சென்னையில் பிரம்மாண்டமான விழாவில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.