‘பொன்னியின் செல்வன் 2’ பர்ஸ்ட் சிங்கில் ரிலீஸ் எப்போது?

Filed under: சினிமா |
கடந்த ஆண்டு “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவானது. இத்திரைப்படம் ரூபாய் 500 கோடிக்கு மேல் வசூல் செய்தது. தற்போது இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. “அகநக” என்று தொடங்கும் பாடல் வரும் 20ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என லைகா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்த இந்த பாடலை க்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளதாகவும், இளங்கோ கிருஷ்ணன் பாடியுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இப்பாடல் மிகப்பெரியளவில் இணையதளங்களில் வைரலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.