போலி டோல்கேட்.. ரூ.75 கோடி பொதுமக்களிடம் மோசடி!

Filed under: இந்தியா |

ஒன்றரை ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தில் சுமார் போலி டோல்கேட் இயங்கி வந்ததாகவும் அதன் மூலம் பொதுமக்களிடமிருந்து 75 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத்தில் போலீஸ் சுங்கச்சாவடி அமைத்து ஒன்றரை ஆண்டுகளாக அரசு அதிகாரிகள் மற்றும் மக்களை ஏமாற்றி 75 கோடி மோசடி செய்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தில் போலி சுங்கச்சாவடி அமைக்கப்பட்டதாகவும் அதற்கு தனி சாலை வசதி ஏற்படுத்தி நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் திருப்பி விடப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பாதை வழியாக செல்லும் வாகனங்களில் இடமிருந்து சுங்கச்சாவடி வசூல் செய்யப்பட்டதாகவும் இது குறித்து சந்தேகம் இல்லாததால் யாரும் புகார் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. நெடுஞ்சாலையிலிருந்து வாகனங்களை திருப்பி விடப்பட்டதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்த நிலையில் அவர் இது குறித்து ஆய்வு செய்த போது போலி டோல்கேட் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலி டோல்கேட் நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.