அயோத்தி ராமர் கோவிலில் அடிக்கல் நாட்டி வைத்தார் – பிரதமர் மோடி!

Filed under: இந்தியா |

அயோத்தியில் உள்ள ராமர் கோவில் பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று 40 கிலோ வெள்ளி செங்கலை நாட்டுகிறார்.

இன்று 9.30 மணியளவில் டெல்லியில் இருந்து விமானம் புறப்பட்டு லக்னோவுக்கு வந்தார் பிரதமர் மோடி. அதன் பின் லக்னோவில் இருந்து ஹெலிகாப்டரில் அயோத்திக்கு வந்து சேர்ந்தார்.

பின்பு அயோத்தியில் உள்ள அனுமன்கரி கோவில்லுக்கு சென்று அனுமனுக்கு ஆர்த்தி காட்டி வழிபாடு செய்தார். அடுத்து ராம ஜென்ம பூமியில் உள்ள குழந்தை ராமரை தரிசனம் செய்தார்.

https://twitter.com/ANI/status/1290898447113916416

இதை அடுத்து ராம ஜென்ம பூமியில் பாரிஜாதம் மரக்கன்றை நட்டு வைத்தார்.

தொடர்ந்து பூமி பூஜையில் கலந்து கொண்டார். அந்த பூஜையில் வேத மந்திரங்கள் ஓதப்பட்டு பூஜை நடைபெற்றது.

https://twitter.com/ANI/status/1290900777632804864

தற்போது கிலோ வெள்ளி செங்கலை கொண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினர். அயோத்தி யில் உள்ள ராமர் கோவில் பூமி பூஜை அடிக்கல் நாட்டினர் பிரதமர் மோடி. 360 தூண்கள், 5 குவி மாடம், 161 அடி கோபுரம் ராமர் கோயில் வடிவம் கட்டப்படவுள்ளது.