போஸ்டர் ஒட்டினால் அபராதம்!

Filed under: சென்னை |

சென்னை மாநகராட்சி தெருக்களின் பொதுப்பலகைகளில் போஸ்டர் ஒட்டி விளம்பரங்கள் செய்தால் அபராதம் விதிக்கப்படும் எச்சரிக்கை செய்துள்ளது.

 

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மையைப் பராமரிக்கும் வகையில், மாநகராட்சி சார்பில் திடக்கழிவுகளை அகற்றுதல் சாலை, மையத்தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கல் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பேருந்து நிறுத்த நிழற்குடைகள், பாலங்கள், பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் வண்ண ஓவியங்களால் அழகுபடுத்தப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்துள்ளது.