மதுரையில் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் சமூகப் பரவலாக மாறவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மன நல மருத்துவர்களை மூலம் ஆலோசனை வழங்குவதற்கு திட்டமிட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, ஆர்.பி உதயகுமார் ஆகியோர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
அந்தக் கூட்டம் முடிந்த பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியது: கொரோனா வைரஸ் தான் நம்முடைய எதிரி அதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அல்ல. கொரோனாவை பற்றி மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். அதே சமயத்தில் கவனமாக செயல்பட வேண்டும் என அமைச்சர் கூறியுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் 1,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.