மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான 1190 ஏக்கர் சொத்து மீட்பு!

Filed under: தமிழகம் |

நீதிமன்றத்தின் உத்தரவால் 13 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான சொத்து மீட்கப்பட்டுள்ளது.

மதுரை ஆதின மடத்திற்கு சொந்தமான சிவகங்கை மாவட்டம் முக்குடி கிராமத்தில் உள்ளது. 1190 ஏக்கர் தரிசு நிலம் 2009ல் குத்தகைக்கு விடப்பட்டது. புதுச்சேரியை சேர்ந்த தொழிலதிபர் சண்முகத்திற்கு ஆண்டுக்கு 1 லட்சம் என்ற அடிப்படையில் 29 ஆண்டு குத்தகை விடப்பட்டிருந்தது. குத்தகைக்கு பெற்றதிலிருந்து நிலத்திற்கான வாடகை, குத்தகை பணம் எதுவுமே தொழிலதிபர் கொடுக்கவில்லை என புகாரளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.