மருத்துவர் செய்த மகத்தான செயல்!

Filed under: இந்தியா |

பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் 3 கிமீ ஓடியே சென்று அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் நந்தகோபால் தான் ஓட்டிச்சென்ற காரை நிறுத்தி ஓடியே மருத்துவமனைக்கு சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மருத்துவர் நந்தகோபால் நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் டிராபிக்கில் சிக்கி கொண்டதை அடுத்து அவர் பதட்டமானார். மருத்துவமனை இன்னும் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்த நிலையில் அவர் காரில் இருந்து இறங்கி நடந்தும் ஓடியும் சென்று மருத்துவமனைக்கு சென்று அறுவை சிகிச்சை செய்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் “டிராபிக் சிக்னலில் இருந்து இப்போதைக்கு கார் நகரும் என்று எனக்கு தோணவில்லை. அதனால்தான் உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனைக்கு வர வேண்டும் என்பதால் ஓடியே வந்தேன்” என்று கூறியுள்ளார்.