மர்மமான முறையில் 8 வயது சிறுவன் கொடூர கொலை ! போலிசார் விசாரணை !!

Filed under: தமிழகம் |

திருப்பூர், ஜூன் 12

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த சொட்டகவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் தங்கராஜ் இவருக்கு சுமதி எனற மனைவியும் விக்னேஷ் மற்றும் பவனேஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர். பணியன் தொழிலாளி ஆன இவர்கள் காலையில் வேலைக்கு சென்றால் மாலைதான் வீடு திரும்புவார்கள் இதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில் நேற்றை தினம் பெற்றோர் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ள நிலையில் பவனேஷ் மதியத்தில் இருந்து காணவில்லை என கூறப்படுகிறது. பின்னர் வேலையை முடித்துவந்த தங்கராஜ் நேற்று இரவு ஊத்துக்குளி காவல் நிலையம் சென்று மகனை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை பல்லகவுண்டன் பாளையம் குளப்பகுதிக்கு காலைகடன் களிக்க சென்றவர்கள் பார்த்துவிட்டு ஊத்துக்குளி காவல் நிலையை போலிசாருக்கு அழைத்து சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கூறியுள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைபற்றி பிரேதபரிசோதனைக்கா அனுப்பிவைத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் டெவில் வரவலைக்கப்பட்டதில் மோப்ப நாய் சிறிது தூரம் சென்று திரும்பியது.இந்த நிலையில் இக்கொலை சம்பவம் குறித்து மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை ஊத்துக்குளி போலிசார் தேடிவருகின்றனர்.