மாணவி தற்கொலை; இளைஞர் போக்சாவில் கைது!

Filed under: தமிழகம் |

10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்தது தொடர்பாக தீனதயாளன் என்ற இளைஞரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் காட்டூர் வளாகம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி மற்றும் மனைவி மகேஷ்வரிக்குஒரு மகள் (15) உள்ளார். இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். தந்தை மூர்த்தி 2 ஆண்டுகளுக்கு முன் மறைந்த நிலையில், தாயும் மகளும் வசித்து வந்தனர். அப்பகுதியில் வசித்து வரும் தீனதயாளன் (19) மாணவியுடன் பழகி வந்ததுள்ளார் நேற்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி, மாணவியின் தாய் மகேஷ்வரி திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், தீனதயாளன் மீது வழக்குப் பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.