முகநூலில் விநோதமான காதல்!

Filed under: தமிழகம் |

முகநூல் மூலம் காதலித்து 45 வயது பெண்ணை 62 வயது மத போதகர் ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்களது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் மத போதகர் ஒருவர் முகநூல் மூலம் அதே பகுதியைச் ஒரு பெண் ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று இரவு மனைவிக்கு உணவு வாங்க மதபோதகர் வெளியே சென்று இருந்த போது பெண்ணின் குடும்பத்தினர் திடீரென வீட்டிற்குள் புகுந்து பெண்ணை ஒரு அறையில் வைத்து பூட்டி வைத்தனர், அதன் பிறகு வெளிக்கதவையும் பூட்டி விட்டதால் மத போதகர் அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். காவல்துறையினர் விரைந்து வந்து குடும்பத்தினரை சமாதானப்படுத்தி இந்த பிரச்சனையை நீதிமன்றம் மூலம் தீர்த்துக் கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.