முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாரியப்பன் தங்கவேலுக்கு வாழ்த்து

Filed under: அரசியல்,விளையாட்டு |

தற்போது சீன நாட்டில் ஹாங்சோ நகரில் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி 2023 நடந்து வருகிறது.

இந்திய வீரர் நிசாத் குமார் தங்கம் இப்போட்டியில், டி47 உயரம் தாண்டுததல் பிரிவில் வென்றுள்ளார். இப்பிரிவில் 2.02 உயரம் தாண்டிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதேபோல் ஆசியன் பாரா விளையாட்டு போட்டியில் உயரம் தாண்டுதல் டி பிரிவில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. முதலமைச்சர் தன் வலைதள பக்கத்தில் அவருக்கு பாராட்டுகள் தெரிவித்துள்ளார். அதில், “ஆசிய விளையாட்டுப் போட்டி 2023 உயரம் தாண்டுதல் டி-63 பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் மீண்டுமொருமுறை பெருமை தேடித்தந்துள்ள நமது தங்கவேலு அவர்களுக்கு எனது நெஞ்சார்த்த பாராட்டுகள்’’ என்று தெரிவித்துள்ளார்.