முதல்வர் பழனிசாமிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

Filed under: தமிழகம் |

 புது டெல்லி,மே 12

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று தனது 66 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பிறந்தநாள் கொண்டாடும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துகள், நல்ல உடல் ஆரோக்கியத்துடன், நீண்ட  காலம் மக்கள் சேவையாற்ற இறைவனிடம் பிராத்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.