இன்று பிரதமர் மோடியின் 70வது பிறந்தநாள்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து!

Filed under: சென்னை |

இன்று பிரதமர் மோடியின் 70வது பிறந்தநாளுக்கு இந்தியாவில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவருடைய பிறந்தநாளுக்கு இந்தியாவில முழுவதும் ஏழை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், மாணவர்களுக்கு தேவையான பொருட்கள், ரத்ததானம் போன்றவை பாஜக தொண்டர்களால் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடிக்காக ஜனாதிபதி, மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், இந்தியா நடிகர்கள், வெளிநாட்டுத் தலைவர்கள் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

தற்போது நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அந்த வாழ்த்தில்; மரியாதைக்குரிய அன்பு மோடி ஜி, இந்த கடினமான காலங்களில் உங்களை போன்ற கடினமான மனிதருக்கு அதிக வலிமை கிடைக்க வாழ்த்துகிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

https://twitter.com/rajinikanth/status/1306522436679024640

இவ்வாறு ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.