மும்பை பள்ளியின் புதிய முயற்சி!

Filed under: இந்தியா |

மும்பையில் பள்ளி ஒன்றில் மாணவர்கள் தாங்கள் விரும்பியது போல சீருடை அணியலாம் என்று அறிவித்துள்ளது. இம்முயற்சிக்காக அப்பகுதியில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

இந்தியாவில் அனைத்து பள்ளிகளிலும் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் சீருடை ஒன்றாக இருக்கம். பள்ளிகளில் தீர்மானிக்கும் சீருடையை மட்டுமே மாணவ மாணவிகள் அணிந்து வருவார்கள். இந்நிலையில் மும்பையை சேர்ந்த ஆதித்ய பிர்லா வேர்ல்டு அகாடமி என்ற பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப ஸ்கர்ட், பேண்ட் என எந்த சீருடை வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. மாணவர்கள், மாணவிகள் தங்களுக்கு பிடித்த சீருடையை அணிந்து கொண்டு வரலாம் என்றும் எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது என்பதற்காகவே இந்த புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பள்ளியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த அதிரடி முடிவு மாணவ-, மாணவிகளுக்கு மட்டுமின்றி பெற்றோர்களுக்கும் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.