மெட்ரோவில் இலவச டிக்கெட் கிடையாது!

Filed under: சென்னை,விளையாட்டு |

சென்னை மெட்ரோ ஐபிஎல் சீசன் நடந்து வரும்போது சென்னையில் நடைபெறும் ப்ளே ஆப் போட்டிகளுக்கு வழங்கப்பட்ட இலவச மெட்ரோ ரயில் சேவை இனி கிடையாது என அறிவித்துள்ளது.

ஐபிஎல் 16வது சீசன் கடந்த மார்ச் மாதம் தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. ஐபிஎல் சீசனை கொண்டாடும் விதமாக சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளை காண சென்ற கிரிக்கெட் ரசிகர்களுக்கு சென்னை மெட்ரோவில் டிக்கெட் இல்லாமல் இலவசமாக அனுமதி அளிக்கப்பட்டது. சென்னையில் நடந்த அனைத்து லீக் போட்டிகளுக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கிரிக்கெட் நுழைவு டிக்கெட்டை காட்டி இலவசமாக மெட்ரோவில் பயணித்தனர். ஆனால் நாளை நடைபெற உள்ள ப்ளே ஆப் போட்டிக்கு இந்த சலுகை கிடையாது என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இலவச அனுமதி லீக் போட்டிகளோடே முடிந்து விட்டதால் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் ப்ளே ஆப் போட்டிகளை காண மெட்ரோ ரயிலில் செல்ல டிக்கெட் எடுக்க வேண்டும். இரவு 1 மணி வரை அன்றைய தினங்களில் மெட்ரோ ரயில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.