ராமர் கோவிலில் ரஜினிகாந்த்

Filed under: இந்தியா,சினிமா |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

ராமஜென்ம பூமியின் பாதுகாப்பு மற்றும் ராமர் கோவில் புனிதத்தை கருத்தில் கொண்டு கோயில் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இக்கோயில் கட்டுமானப் பணிகள் முடிந்து எப்போது கோயில் திறக்கப்படும் என்ற ஆர்வம் பக்தர்களிடையே எழுந்துள்ளது. சமீபத்தில், கோயில் திறப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘வரும் 2024ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயில் திறக்கப்படும் ‘என்று தெரிவித்தார். வடஇந்தியாவில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு வரும் நடிகர் ரஜினிகாந்த், தற்போது உத்தரபிரதேசம் மாநிலத்திற்குச் சென்றுள்ள நிலையில், அம்மாநில ஆளுநர், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவ் ஆகிய தலைவர்களை சந்தித்தார். பின், ராமர் கோயில் கட்டப்பட்டு வரும் இடத்தை நேற்று, மாலை ரஜினிகாந்த் தன் மனைவி லதாவுடன் நேரில் சென்று பார்வையிட்டு, கோயிலில் சுவாமியை தரிசனம் செய்தார். இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக, கேதார்நாத், பத்ரிநாத், பாபாஜி குகை ஆகிய புனித தலங்களுக்குச் ரஜினிகாந்த் சென்றிருந்தார்.