ரிஷப் பாண்டி -குடும்பத்தினர் குற்றச்சாட்டு!

Filed under: விளையாட்டு |

கிரிக்கெட் வீரர் ரிஷப் பாண்டி குடும்பத்தினர் தனது மகனுக்கு போதிய ஓய்வு கிடைப்பதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தபோது, தடுப்பு பலகையின் மீது மோதியதில் கார் தீப்பிடித்து எரிந்து விபத்தில் சிக்கியது. விபத்தில், படுகாயமடைந்த ரிஷப் பண்ட் மற்றும் அவருடன் பயணித்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில், ரிஷப் பண்ட்டின் உடலின் பல பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அவர் விரைவில் குணமடைய வேண்டுமென சக வீரர்களும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகளும் ஆறுதலும் கூறி வருகின்றனர். கார் விபத்தில் சிக்கி படுமாயம் அடைந்துள்ள ரிஷப் பண்டிற்கு போதிய ஓய்வு கிடைப்பதில்லை எனவும், பலரும் ஆறுதல்கூறி வருவது, ரிஷப் பண்டின் ஆற்றலைக்குறைக்கலாம் என மருத்துவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளதாக அவாது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.