ருத்ரன் பர்ஸ்ட்லுக்!

Filed under: சினிமா |

“ருத்ரன்” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

கடந்த சில மாதங்களாக “ருத்ரன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. விரைவில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தொடங்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பிரபல தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இப்படம் அதிரடி ஆக்ஷன் படமாக இருக்குமென்று கூறப்படுகிறது. சற்று முன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. ஆக்ரோஷமாக எதிரிகளை அடித்து நொறுக்கும் கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார் என்பது போஸ்டரை பார்க்கும் போது தெரிகிறது. படத்தின் போஸ்டர் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. படம் வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.