ரேசன் கடைகளுக்கு புதிய அறிவிப்பு!

Filed under: Uncategory |

தமிழக அரசு ரேசன் கடைகளில் காதி பொருட்கள், பனைவெல்லம் ஆகிய பொருட்களை விற்பனை செய்யும் நியாயவிலை கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை தருவதாக அறிவித்துள்ளது.


தமிழக அரச வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் உள்ள நியாய விலைக்கடைகளில் காதி பொருட்கள், பனைவெல்லம் ஆகிய பொருட்களை ஒரு மாதத்திற்கு மேல் கடைகளில் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் விற்பனை செய்ய வேண்டும். கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் 15 ஆயிரத்திற்கும் மேல் விற்பனை செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற நியாயவிலைக் கடைகளில் ரூ.25 அயிரம் விற்பனை செய்ய வேண்டும். இந்த விற்பனைத் தொகையை எட்டும், விற்பனையாளர்களுக்கு அதற்குரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.