லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து!

Filed under: தமிழகம் |

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே முன்னாள் சென்ற லாரி மீது ஆம்னி பேருந்து மோதியதில் இரும்பு பட்டைக்குள் சிக்கி இரண்டு பேர் உயிரிழப்பு 10க்கும் மேற்பட்டோர் படுக்காயம் இதனால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது!

சென்னையில் இருந்து 20க்கும் பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று தேனி மாவட்டம் போடி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்த சிவா என்பவர் ஓட்டி வந்தார். மேலும் இவருடன் மாற்று ஓட்டுனராக போடி பகுதியை சேர்ந்த சுருளி முத்து என்பவர் உடன் வந்தார். இதற்கிடையே இந்த பேருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் உள்ள தனியார் பால் பண்ணை எதிரே வந்தபோது முன்னாள் இரும்புக் பட்டைகள் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த கனரக லாரி ஒன்று திடீரென பிரேக் பிடித்த போது கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து லாரியின் டிரெய்லர் மீது அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்து ஓட்டுநர் சிவா மற்றும் மாற்று ஓட்டுனர் சுருளி முத்து இருவரும் சம்பவ இடத்திலேயே இரும்பு பட்டைகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து நடந்த ஒரு சில நொடிகளில் ஆம்னி பேருந்தின் பின்னால் சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற கார் ஒன்று ஆம்னி பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. நொடி பொழுதில் லாரி மீது ஆம்னி பேருந்தும் ஆம்னி பேருந்து காரும் மோதிய விபத்தில் ஆம்னி பேருந்து ஓட்டுனர்கள் இருவர் உயிரிழந்த நிலையில் அதில் பயணம் செய்த பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயங்களுடன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டனர்.

நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற இந்த சாலை விபத்தால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது பின்னர் விபத்தில் சிக்கிக் கொண்ட வாகனங்களை ராட்சத இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு பின்பு போக்குவரத்து சரி செய்யப்பட்டது.