வங்கக்கடலில் புயல்: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

Filed under: தமிழகம் |

கடந்த நான்கு நாட்களாக தமிழகம் முழுதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது வங்க கடலில் புயல் சின்னம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் தென்கிழக்கு வங்க கடலில் உருவாகும் புயல், ஆந்திராவில் உள்ள நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என்று கணித்துள்ளது. இந்த புயல் டிசம்பர் 4ம் தேதி கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது டிசம்பர் 5ம் தேதி கடக்கும் என்று கூறப்படுகிறது. இப்புயல் காரணமாக சென்னையில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை அதாவது டிசம்பர் 2ம் தேதி சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. சென்னை மட்டுமின்றி வேறு சில மாவட்டங்களுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுமா என்பது அறிவிப்பு வருவதை பொறுத்தே அமையும்.