வந்தியத்தேவன் போஸ்டர் ரிலீஸ்!

Filed under: சினிமா |

“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கின் வந்தியத்தேவன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள அரச காலத்து திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிகர், நடிகை பட்டாளமே நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. “பொன்னியின் செல்வன்” இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ள நிலையில் நேற்று விக்ரமின் ஆதித்த கரிகாலன் போஸ்டர் வெளியானது. தற்போது லைகா நிறுவனம் கார்த்தி நடிக்கும் வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் சமுக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.