வனிதா விஜயகுமார் மகன் ஹீரோவாகிறார்!

Filed under: சினிமா |

விரைவில் நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா திரைவுலகில் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருடைய மகன் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வனிதா விஜயகுமார் மற்றும் அவரது முன்னாள் கணவர் ஆகாஷ் ஆகியோருக்கு பிறந்த மகன் விஜய் ஸ்ரீஹரி. 22 வயதான இவர் தற்போது சினிமாவில் ஹீரோவாக போகிறார். இவரது முதல் படத்தை பிரபல இயக்குனர் பிரபு சாலமன் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு இளம் காதலர்களின் கதையம்சம் கொண்ட படம் என்றும் இப்படத்தில் தான் வனிதாவின் மகன் விஜய் ஸ்ரீஹரி ஹீரோவாக அறிமுகமாக போகிறாராம். இப்படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா நாயகியாக விரைவில் திரையுலகில் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. திடீர் திருப்பமாக வனிதாவின் மகன் ஹீரோவாக அறிமுகமாக இருப்பதை அடுத்து அவரது குடும்பத்தினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.