முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு தனியார் பள்ளியின் 30வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
கொளத்தூர் தொகுதிக்கு வருவதில் மகிழ்கிறேன். வயதானாலும் நான் இன்னும் மாணவனாகவே உணர்கிறேன்.
மாணவர்களைச் சந்திக்கும் போது, எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. வாக்களித்த மக்களுக்குப் பணியாற்றுவேன். நான் உங்களில் ஒருவனாக இருக்கவேண்டும். ஓயாத பணியாற்றுவதால் நாட்டிலேயே முதன்மையாக முதல்வராக இருக்க முடிகிறது. இவ்வாறு அவர் பேசினார்.