விசாரணை கைதியின் விவகாரத்தில் புதிய அதிகாரி நியமனம்!

Filed under: அரசியல்,தமிழகம் |

தமிழக அரசு அம்பாசமுத்திர நகரில் விசாரணை கைதியின் பல்லை பிடுங்கிய விவகாரம் குறித்து விசாரணை செய்வதற்கு அமுதா என்ற அதிகாரியை நியமனம் செய்துள்ளது.

காவல் நிலையத்திற்கு அடிதடி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒருவர் காவல்துறையினரால் பல் பிடுங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர்சிங் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல் புடுங்கிய புகார் குறித்து விசாரணை செய்ய உயர்மட்ட விசாரணை அதிகாரியாக அமுதா என்பவரை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. இந்த புகார் குறித்து விரிவாக விசாரணை செய்து விசாரணை அறிக்கையை ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்கும்படி தமிழக அரசு அவருக்கு உத்தரவு பெற்றுள்ளது.