விசிக பிரமுகர் ரவிக்குமாருக்கு பத்திரிகையாளர் மாலன் பதிலடி

Filed under: அரசியல்,தமிழகம் |

பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை கொண்டு கருத்து சொன்ன விசிக பிரமுகரும் திமுக சின்னத்தில் நின்று வெற்றிபெற்றவருமான ரவிக்குமார் Mp, சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனத்தை சந்தித்து வருகிறார்.

குறிப்பாக 2015- ம் ஆண்டு ரவிக்குமார் பாஜகவிற்கு எதிராக ஒரு கருத்தை தெரிவித்தார், அது இந்த தேர்தலிலும் எதிரொலிப்பதாக தான் கருதுவதாக தெரிவித்தார், இந்த சூழலில்தான் ரவிக்குமாருக்கு மூத்த பத்திரிகையாளர் மாலன் பதில் கொடுத்துள்ளார், இதுகுறித்து மாலன் தெரிவித்த கருத்து பின்வருமாறு.

எனது இனிய நண்பரும் விழுப்புரம் திமுக எம்.பியுமான முனைவர் து.ரவிக்குமாரின் இலக்கிய முயற்சிகள் மீது எனக்கு மிகுந்த மதிப்புண்டு. குறிப்பாக அவரது மொழிபெயர்ப்புகள் மீது. ஆனால் அவரது அரசியல் நிலைப்பாடுகள் எனக்குப் புன்னகையையே வரவழைத்துள்ளன.
அவர் இம்மாதம் எட்டாம் தேதி பிகார் தேர்தல் முடிவு வரும்முன் ஒரு பதிவு போட்டிருந்தார். அந்தப் பதிவை இன்று மறுபடியும் பார்த்தபோது எழுந்த எண்ணங்கள்
இவை.

கீழே இருப்பது ரவிகுமாரின் பதிவும் என் எண்ணங்களும்
//2015 இல் பீகார் தேர்தல் முடிவு வெளியானபோது நான் இட்ட பதிவு இது. இப்போதும் பொருந்துவதுபோல் தோன்றுகிறது
Bihar Poll: Nine Lessons to Tamilnadu

Lesson 1- Alliance with BJP will not work
ஆனால் பீகார் முடிவுகள் என்ன காட்டுகின்றன என்றால் Alliance with Congress will not work. காங்கிரசிற்கு கூடுதல் இடம் கொடுப்பதற்காக இரு சிறு கட்சிகளை கூட்டணியை விட்டு வெளியே அனுப்பினார் தேஜஸ்வி. காங்கிரசிற்கு குறைவாக இடம் கொடுத்திருந்தால் அவர் இன்று ஆட்சியில் அமர்ந்திருக்கக் கூடும். கூடா நட்பு கேடாய் முடிந்தது. ஆனால் பாஜகவோடு கூட்டணி வைத்துக் கொண்ட நிதீஷின் இடங்கள் குறைந்தாலும் நான்காம் முறையாக முதல்வராகப் போகிறார்.

Lesson 2- Reservation is still an important issue
இந்தத் தேர்தலில் அது பிரசாரத்தில் பெரிதாகப் பேசப்படவில்லை. பொருளாதார நீதி Economic justice அதிகம் பேசப்பட்டது. இட ஒதுக்கீட்டிற்கு எதிரி என்று எதிர்கட்சிகளால் பூச்சாண்டி காட்டப்படும் பாஜக முன்னை விட அதிக இடங்கள் பெற்றிருக்கிறது
Lesson 3- People will defeat fundamentalist terror
இந்த fundamentalist terror யாரைக் குறிக்கிறது எனத் தெரியவில்லை. ஒரு வேளை அது பாஜகவை என்றால் (அவரது கட்சி அப்படித்தான் பாஜகவை சொல்வது வழக்கம்) பாஜக போட்டியிட்ட தொகுதிகளில் அதிகம் தொகுதிகளை வென்றிருக்கிறது. அதன் ஸ்டிரைக் ரேட் மற்ற கட்சிகளை விட அதிகம். இன்னும் சொல்லப்போனால் கம்யூனிஸ்ட்கள் நீங்கலாக ஸ்டிரைக்ரேட் கூடிய ஒரே கட்சி பாஜகதான்.

Lesson 4- Dalits will reject their leaders if they align with BJP
பாஜக கூட்டணியில் இருந்த தலித் கட்சிகள் வென்றிருக்கின்றன. மாறாக காங்கிரஸ் தன் கூட்டணியில் தலித் கட்சிகளுக்கு இடமே கொடுக்கவில்லை
Lesson 5- Don’t imitate Mr Modi
யாரை இப்படிச் சொல்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் நிதீஷ் மீண்டும் ஆட்சியில் அமர மோதிதான் காரணம்
Lesson 6 – Parliamentary election results cant be repeated in assembly poll
மிகச் சரியான வார்த்தை. அதனால் திமுக கவனமாக இருக்கட்டும்.

Lesson 7- shed your ego, bring people interest to the centre of politics
வைகோ அவர்களே, ரவிக்குமார் சொல்வது கேட்கிறதா?
Lesson 8- Dont rely on personality cult
இந்த அறிவுரை ஸ்டாலினுக்கும் அவர் மகனுக்கும்
Lesson 9 – Coalition form of government is the only way to defeat authoritarianism, majoritarianism at the Centre
மிகச் சரி. ஆனால் யாருடன் கூட்டு என்பது முக்கியம். காங்கிரசுடன் கூட்டு வைத்தால் என்ன ஆகும் என்பதை நேற்று பீகாரும், அன்று கர்நாடாகவும் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
நேற்றைய தேர்தல் முடிவுகள் அடிப்படையில் ரவிக்குமாரின் புதிய 9 கட்டளைகளைக் காணக் காத்திருக்கிறேன் இவ்வாறு மாலன் ரவிக்குமாருக்கு பதில் கொடுத்துள்ளார்.

அதாவது ரவி குமார் காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும் என்று பாஜக மீது குற்றம் சுமத்தி பல்வேறு கருத்துக்களை தெரிவிக்க ஆனால் நிலைமையோ பாஜக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது, அதோடு நில்லாமல் காங்கிரஸ் போட்டியிட்ட 70 தொகுதிகளில் வெறும் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற செய்திகளை உடனே தெரிந்து கொள்ள நமது நெற்றிக்கண் சமூக வலைத்தள பக்கங்களை பின்பற்றி கொள்ளவும்