ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா வைரஸ் உறுதி!

Filed under: தமிழகம் |

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பழனிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி உறுதியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணத்தினால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கு உத்தரவு பல தளர்வுகளுடன் அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு சமயத்தில் கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வந்துள்ளார் எம்எல்ஏ பழனி. இவர் சமீபத்தில் சென்னைக்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

தற்போது அவருக்கு கொரோனா வைரஸின் அறிகுறிகள் இருந்ததை அடுத்து அவருக்கு பரிசோதனை நடத்தியதில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. இதனை தொடர்ந்து நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் இவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.