வின்டோஸ் கதை முடிந்ததா?

Filed under: இந்தியா |

இதுவரை விண்டோஸ் இயங்கு தளத்தில் இயங்கி வந்த மத்திய பாதுகாப்பு அமைத்துறை அமைச்சகம் தற்போது மாயா இயங்குதளத்துக்கு மாற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

சைபர் பாதுகாப்பு மற்றும் மால்வேர் சார்ந்த அச்சுறுத்தல்கள் அதிகமாக இருப்பதை அடுத்து விண்டோஸ் இயங்கு தளத்துக்கு மாற்றாக உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட மாயா இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு கணினிகளை பயன்படுத்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மாயா இயங்குதளத்தை பயன்படுத்த கடற்படை அனுமதி வழங்கி உள்ளதாகவும் ராணுவம் மற்றும் விமானப்படை இதன் செயல்பாட்டை பார்வையிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. விண்டோஸ் இயங்கு தளத்துடன் ஒப்பிடும்போது மாயா இயங்குதளம் பாதுகாப்பு அதிகமாக இருப்பதாகவும் சிரமமின்றி கையாள முடியும் என்றும் பாதுகாப்பு அமைச்சக வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது.