விருந்தில் உணவருந்திய இளைஞர் உயிரிழப்பு!

Filed under: தமிழகம் |

கர்ப்பிணி பெண்ணுக்கு நடத்திய விழாவில் கலந்து கொண்டு உணவருந்திய செல்வ முருகன் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார். இச்சம்பவம் திருவாரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் அருகே திருவாசல் மெயின் ரோட்டில் வசிப்பவர் செல்லத்துரை. இவரது மகன் விக்னேஷ். இவரது மனைவி மாரியம்மாள்(26). இவருக்கு 5 மாதம் கர்ப்பமாக இருந்ததால், அவருக்கு 5ம் மாதம் மருந்து கொடுக்கும் விழா நேற்று முன் தினம் நடந்தது. அப்போது, நடந்த விருந்தில் 5 வகையான சாதங்கள் பரிமாறப்பட்டது. இந்த விருந்து சாப்பிட்டவர்களுக்கு கொஞ்ச நேரத்திலேயே வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், அவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 15 பேர் உடல் நலம் குணமடைந்து வீட்டிற்குச் சென்றனர். மீதம், கர்ப்பிணிப் பெண் மாரியம்மாள், உட்பட 7 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது வேலங்குடியைச் சேர்ந்த செல்வமுருகன்(24) என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.